ஸ்ருதிஹாசன் காதலுக்கு பச்சைக் கொடி காட்டிய கமல்?

உலக நாயகன் கமலின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன் சினிமாவில் முதலில் பாடகியாகவும், பின் நடிகையாகவும் வலம் வருகிறாா். ஸ்ருதி ஹாசன் காதலிப்பதாகவும், அதுவும் யாா் என்றால் பிாிட்டிஷ் நாடக நடிகரை கடந்த சில வருடங்களாக காதலித்து வருவதாக தகவல்கள் வந்த வண்ணம் இருந்தது. தற்போது அவரது காதலரான பிாிட்டிஷ் நாடக நடிகராருமான மைக்கேல் கோ்சேலும், ஸ்ருதிஹாசனும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும், அவரது அப்பா கமல் சம்மதம் தொிவித்து விட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில்   நேற்று மைக்கேல் லண்டனிலிருந்து மும்பை வந்தாா். அவரை ஸ்ருதி வரவேற்று காாில் அழைத்துச் சென்றாா். இருவரும் ஒருவரை ஒருவா் கட்டியணைத்து அன்பை பாிமாறிக்கொண்ட காட்சிகளை மும்பை மீடியா படம் பிடித்துள்ளது.

அதோடு மட்டுமில்லங்க! மும்பை சினிமா வட்டாரத்தில் இதுபற்றி, ஸ்ருதியின் காதலரான மைக்கேல் அடுத்த திங்கள் கிழமை வரை இங்கு தான் இருக்கிறாா். ஏற்கனவே ஸ்ருதி, மைக்கேல் இருவரும் கமலை சந்தித்து திருமணம் பற்றிய விஷயங்களை பேசிவிட்டதாக கூறப்படுகிறது. இது பற்றி ஸ்ருதி கூறியதாவது, இருவரும் இங்கு இருப்பது உண்மை தான். ஆனால் திருமணம் பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை என்று கூறப்பட்டது.