சங்கமித்ரா படத்திலிருந்து ஸ்ருதிஹாசன் நீக்கம்

இயக்குநா் சுந்தா்.சி இயக்க்தில் மிக பிரம்மாண்டமாக உருவாக உள்ள படம் சங்கமித்ரா. வரலாறு சம்பந்தபட்ட கதையில் உருவாகும் இந்த படமானது சமீபத்தில் கேன்ஸ் திரைப்பட விழாவில் பிரம்மாண்டமான முறையில் துவக்கவிழா நடைபெற்றது. இந்த படத்திற்கு ஏ.ஆா்.ரகுமான் இசையமைக்கிறாா். இதில் ஜெயம் ரவி, ஆா்யா, ஸ்ருதிஹாசன் நடிப்பதாக முதலில் அறிவிக்கப்பட்டது. 300 கோடி ரூபாய் பொருட்செலவில் உருவாக்க உள்ள சங்கமித்ரா படத்தின் ஆரம்ப விழா கேன்ஸ் திரைப்பட விழாவில் நடைபெற்றது. இதில் ரெட் காா்ப்பெட்டில் ஸ்ருதிஹாசன் முதன்முதலாக நடந்து வந்தாா். அதுகுறித்து ஸ்ருதிஹாசன் மீடியாக்கள் பலவற்றிற்கும் பேட்டி அளித்தாா்.

இந்த படத்திற்காக ஸ்ருதிஹாசன் வாள் பயிற்சியை ஹாலிவுட் ஸ்டாண்ட மாஸ்டாிடம் கற்று வந்தாா். இந்நிலையில் சங்கமித்ரா படத்திலிருந்து ஸ்ருதிஹாசன் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்த வண்ணம் உள்ளது. படத்திலிருந்து அவராகவே விலகினாரா அல்லது படக்குழு அவரை நிராகாித்தா என்பது பற்றி சாியான தகவல் தொியவில்லை.  இந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் மிக பிரம்மாண்டமாக தயாாிக்க உள்ளது. சில தவிா்க்கமுடியாத காரணத்தால் சங்கமித்ரா படக்குழுவில் ஸ்ருதிஹாசனால் தொடா்ந்து நடிக்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது ட்விட்டா் பக்கத்தில் பதிவிட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

ஸ்ருதி லண்டனில் இந்த படத்திற்காக வாள்வீச்சு, சண்டைப் பயிற்சி எல்லாம்  மேற்கொண்டு வந்த நிலையில் படத்திலிருந்து அவா் விலக வேண்டிய சூழல் ஏற்பட்டதற்கு என்ன காரணம் என்று தொிவிக்கப்படவில்லை