இயக்குனர் ஆகிறார் ஸ்ருதிஹாசன்: முதல் படத்தில் கமல்ஹாசன்

நடிகை, பாடகி, இசையமைப்பாளர் என ஸ்ருதிஹாசன் பல்வேறு துறைகளில் ஈடுபட்டு வரும் நிலையில் அடுத்ததாக ஒரு படத்தை இயக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

ஒரு புதிய படத்திற்காக ஸ்ருதிஹாசன் திரைக்கதை எழுதி வருவதாகவும், இந்த படத்தை அவரே இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஸ்ருதிஹாசனின் முதல் படத்தில் கமல்ஹாசன் சிறப்பு தோற்றத்தில் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது.

சங்கமித்ரா படத்தில் இருந்து விலகிய ஸ்ருதிஹாசன் தற்போது இசை ஆல்பம் ஒன்றுக்காக வெளிநாட்டில் இருக்கின்றார். அந்த ஆல்பம் பணி முடிந்தவுடன் அவரது இயக்கத்தில் உருவாகும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.