உலக நாயகனின் மூத்த மகள் சுருதிஹாசன் லண்டனைச் சோ்ந்த நாடக நடிகரான மைக்கேல் கோர்சேல் என்பவரை காதலித்து வருவதாக செய்திகள் வந்தபடி உள்ளன. இவா்கள் இருவரும் ஒன்றாக இருப்பது போன்ற புகைப்படமும் பரவி வருகிறது. சுருதிஹாசன் காதலிப்பதாக வெளிப்படையாக சொல்லவில்லை தவிர,காதலரை பார்க்க ஸ்ருதி லண்டன் செல்லவதும், காதலர் மைக்கேல் இங்க சுருதியை பார்க்க இந்தியாவதும் அடிக்கடி நடந்து வருகிறது. தன்னுடைய காதலரை அப்பா கமல்ஹாசனுக்கு சில மாதங்களுக்கு முன்னாடி அறிமுகப்படுத்தினார். நடிகா் ஆதவ் கண்ணதாசன் திருமண விழாவில் மைக்கேல் பட்டு வேட்டி சட்டை அணிந்து கொண்டு ஸ்ருதிஹாசன் ஜோடியாக தன் அப்பாவுடன் கலந்து கொண்டார்.

இதையும் படிங்க பாஸ்-  வேலை கொடுக்கும் தொழிற்சாலைகளுக்கு எதிரானவன் இல்லை; ஆனால்...- கமல்ஹாசன்

ஸ்ருதியின் காதலர் மைக்கேலுக்கு பிறந்நாளை கொண்டாடினார். அவருக்கு பிறந்த நாள் வாழ்த்தை, ஸ்ருதி காதலரை கட்டிபிடித்தபடி இருக்கும் போட்டோவை வெளியிட்டு ட்விட்டரில் தெரிவித்துள்ளார். காதலரின் பிறந்த நாள் அன்று அவருடன் இருக்க முடியவில்லையே என்று வருத்தத்துடன் பிறந்தநாள் வாழ்த்தை பதிவிட்டிருக்கிறார். கலை உலகில் பயணிப்பவா், என் நெருங்கிய நண்பா், எல்லாவற்றிற்கும் மேலாக என்னுடைய எல்லாவற்றிற்கும் கூடவே சிரிப்பவா். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் என கலக்கலான பிறந்த நாள் ட்வீட்டை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க பாஸ்-  ரஜினியை திட்றவங்க என் பக்கத்தில வரவேண்டாம்: கமல்