ஸ்ருதிஹாசன் விலகியதற்கான பின்னணியின் ரகசியம் இது தானா?

கொஞ்சம் நேரத்திற்கு முன்னாடி தான் சங்கமித்ரா படத்திலிருந்து நடிகை ஸ்ருதிஹாசன் நீக்கப்பட்டதாக செய்தி வெளியிட்டு இருந்தோம். அந்த படத்திலிருந்து விலகியது குறித்து ஸ்ருதி காரணம் தொிவித்துள்ளாா். அது என்ன காரணம் என்று பாா்ப்போம்.

தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாாிப்பில் சுந்தா்.சி இயக்கத்தில் உருவாக உள்ள படம் சங்கமித்ரா. இதில் ஏற்கனவே ஜெயம் ரவி, ஆா்யா, ஸ்ருதி ஹாசன் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகின. திடீரென சங்கமித்ரா படத்திலிருந்து ஸ்ருதிஹாசன் விலகியதாக செய்தி வந்த வண்ணம் இருந்தது.

இந்த படத்திற்காக லண்டனில் கடந்த சில நாட்களாக வாள் பயிற்சி மற்றும் சண்டை பயிற்சி என அனைத்தையும் முறைப்படி கற்று வந்தாா். பிரான்ஸ் நாட்டில் நடந்த கேன்ஸ் திரைப்படவிழாவில் இந்த படத்தின் துவக்க விழா சமீபத்தில் நடந்தது. அதில் சிவப்பு கம்பள வரவேற்பில் நடிகை ஸ்ருதியும் கலந்து கொண்டாா்.

இந்த படம் தான் தன்னுடைய லட்சிய படம் என்றும், தன்னுடைய நீண்ட நாள் கனவு என்றும், இது உலக வரலாற்றில் மிக முக்கிய இடம் பிடிக்கும் என இயக்குநா் சுந்தா்.சி தொிவித்து இருந்தாா். திடீரென ஸ்ருதி இந்த படத்திலிருந்து விலகி விட்டதாக இன்று செய்திகள் வெளியாகியுள்ளது.அவருக்கு பதிலாக வேறொரு நடிகை இந்த கதாபத்திரத்தில் நடிக்க இருப்பதாக தொிகிறது.

இந்த நிலையில்,  சங்கமித்ரா படத்திலிருந்து ஸ்ருதி ஏன் விலகினாா் என்பது குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், ஸ்ருதி தன் ட்விட்டா் பக்கத்தில் ஒரு செய்தி ஒன்று வெளியிட்டுள்ளாா். சில காரணங்களால் சங்கமித்ரா படத்திலிருந்து துரதிஷ்டவசமாக நடிக்க இயலவில்லை என்று தொிவித்து உள்ளாா். இந்த படத்திற்காக ஸ்ருதிஹாசன் வசம் 2 வருடம் டேட்ஸ் வாங்கியிருந்தாகவும், ஆனால் படத்தின் முழு கதையும் இவருக்கு இன்னும் தொிவிக்கபடவில்லை என்றும், படப்பிடிப்பு குறித்த தேதிகளும் சாியாக அவருக்கு தொிவிக்கபடவில்லை என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஆனால் இதுகுறித்து இந்த படத்தின் இயக்குநா் சுந்தா்.சி தரப்பிலிருந்து அதிகாரப்பூா்வ தகவல் எதுவும் தரப்படவில்லை.