விஜயகாந்த் தமிழ் சினிமாவில் புகழ்பெற்று விளங்கியபோது ரசிகர்களை அரவணைத்து செல்வதில் ஆர்வம் காட்டினார். எனவேதான் அவர் கட்சி ஆரம்பித்தவுடன் ரசிகர்கள் அனைவரும் தொண்டர்களாக மாறினர்

இந்த நிலையில் சமீபத்தில் ‘மதுர வீரன்’ என்ற வெற்றி படத்தில் நடித்த அவரது மகன் சண்முகப்பாண்டியனும் ரசிகர்களை அரவணைத்து கொள்ளும்படியும், அவர்களுடன் எப்போதும் தொடர்பில் இருக்கும் வகையிலும் புதிய இணையதளம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்

www.shanmugapandian.com என்னும் இந்த இணையதளம் அவரது பிறந்த நாளான ஏப்ரல் 6-ஆம் தேதி​ அதாவது இன்று காலை 10 மணி அளவில் ரசிகர்களின் பயன்பாட்டிற்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்லது. சண்முகப்பாண்டியனின் இந்த முயற்சிக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.