கமலை அடுத்து ரஜினி-கலக்கும் சிபிராஜ்

02:26 மணி

சிபிராஜ் தற்போது சைத்தான் பட இயக்குனர் கிருஷ்ண மூர்த்தி இயக்கத்தில் சத்யா என்ற படத்தில் நடித்து வருகிறார். 1988ம் ஆண்டு கமல்ஹாசன் நடித்து சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் மாபெரும் வெற்றி பெற்ற படம் சத்யா.இந்த தலைப்பை முறைப்படி அனுமதி வாங்கி சிபிராஜ் தனது படத்திற்கு வைத்துள்ளார். வரலட்சுமி நாயகியாக நடிக்கும் இந்த படத்தை சத்யராஜ் தயாரிக்கிறார்.

இந்த நிலையில் சிபிராஜ் அடுத்து ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதற்கு ரஜினி நடித்து வெற்றிபெற்ற திரைப்படமான ரங்கா என்ற பெயரை வைத்துள்ளனர். நாளைய இயக்குனர் புகழ் வினோத் இயக்கும் இந்த படத்தில் நிகிலா விமல் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

(Visited 12 times, 1 visits today)
The following two tabs change content below.
கோ.வெங்கடேசன்

கோ.வெங்கடேசன்

இவர் கடந்த 7 ஆண்டுகளாக தமிழ் சினிமா துறையில் பணியாற்றி வருகிறார். தமிழ் திரையுலகம் பற்றிய பல அறிய தகவல்களை தொகுத்து வங்குவதில் சிறப்பானவர். இவரை தொடர்புகொள்ள: 9715029812