சிபிராஜ், ரம்யா நம்பீசன் நடித்து வரும் ‘சத்யா’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் ஒரு முக்கிய காட்சியில் லிப்லாக் காட்சி ஒன்றை படமாக்க இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி முடிவு செய்தார். முதலில் இந்த காட்சியை நாயகி ரம்யா நம்பீசனிடம் விளக்கியபோது, அவர் இந்த காட்சி கதைக்கு அவசியம் என்பதை புரிந்து கொண்டு நடிக்க ஒப்புக்கொண்டார்.

ஆனால் லிப்லாக் காட்சியில் நடிக்க சிபிராஜ் மறுத்துவிட்டாராம். இந்த காட்சியை திரையரங்கில் தனது மனைவியும் மகனும் பார்த்தால் நன்றாக இருக்காது என்று பிடிவாதமாக மறுத்துவிட்டாராம். இந்த படத்தின் தயாரிப்பாளரே சிபிராஜ் என்பதால் இயக்குனரால் வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை. கடைசியில் இந்த காட்சியை ரத்து செய்துவிட்டார்.

சிபிராஜின் தந்தை சத்யராஜ், கற்பழிப்பு காட்சி உள்பட பல காட்சிகளில் நடித்திருந்த நிலையில் அவரது மகன் லிப்லாக் காட்சிக்கே மறுப்பு தெரிவித்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.