Home சற்றுமுன் ஒரே படத்தில் சித்தார்த், ஜி.வி.பிரகாஷ்: படப்பிடிப்பு தொடங்கியது!

ஒரே படத்தில் சித்தார்த், ஜி.வி.பிரகாஷ்: படப்பிடிப்பு தொடங்கியது!

இயக்குநர் சசி இயக்கத்தில் சித்தார்த் மற்றும் ஜி.வி.பிரகாஷ் இணைந்து நடிக்க உள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு நேற்று முன்தினம் தொடங்கியது.

இயக்குநர் சசி இதற்கு முன்னர் சொல்லாமலே, ரோஜாக்கூட்டம் போன்ற வெற்றிப்படங்களை கொடுத்து பிரபலமானவர். இவர் கடைசியாக விஜய் ஆண்டனியை வைத்து பிச்சைக்காரன் என்ற படத்தை இயக்கினார். இந்த படமும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகர்கள் சித்தார்த், ஜி.வி.பிரகாஷை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க பேச்சு வார்த்தைகள் நடந்து வந்தன.

இதனையடுத்து இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் காஷ்மிரா பர்தேசி கதாநாயகியாக நடிக்க உள்ளார். இவர் தமிழில் நடிக்க உள்ள முதல் படம் இதுவாகும். சித்துக்குமார் இசையமைக்கவுள்ள இந்த படத்துக்கு பிரசன்னா.கே.குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.