ஒட்டுமொத்த திரையுலகமும் ஸ்டிரைக்கில் இருக்கும் நிலையில் விஜய் படத்தின் படப்பிடிப்பு மட்டும் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருவது திரையுலகினர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே தயாரிப்பாளர் ஜேஎஸ்கே சதீஷ் தனது டுவிட்டரில் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் தற்போது நடிகர் சித்தார்த்தும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

திரையுலகில் அனைத்து தயாரிப்பாளர்களும் சமமாம நடத்தப்பட வேண்டும். விஜய் படத்திற்கு மட்டும் சிறப்பு அனுமதி அளித்துள்ளது தயாரிப்பாளர் சங்கத்தின் ஒற்றுமைமையை குலைக்கும் செயல் என்று தனது டுவிட்டரில் சித்தார்த் கூறியுள்ளார்.

சித்தார்த்தின் இந்த டுவீட்டுக்கு விஜய் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தும் அஜித் ரசிகர்கள் ஆதரவு தெரிவித்தும் வருகின்றனர்.