ஒரு திரைப்படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகி ஒருசில வாரங்களில் சாட்டிலைட் சேனல்களிலும், ஒருசில நாட்களில் நெட்பிளிக்ஸ் உள்பட ஆன்லைன் செயலிகளிலும் ரிலீஸ் ஆகிவிடும் நிலை தற்போது உள்ளது. இதற்கு திரையரங்க உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிரகாஷ்ராஜ் நடிப்பில் இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சில நேரங்களில்’ என்ற திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகாமல் நேரடியாக நெட்பிளிக்ஸ் மூலம் இன்று முதல் ரிலீஸ் ஆகிறது.

இந்த அதிரடி முடிவை இந்த படத்தின் தயாரிப்பாளர்களான ஐசரிவேலன், பிரபுதேவா மற்றும் இயக்குனர் விஜய் ஆகியோர் எடுத்துள்ளனர். இந்த முடிவுக்கு எதிர்ப்பும் ஆதரவும் மாறி மாறி வந்து கொண்டிருந்தாலும் இட்ந்ஹ முயற்சி வெற்றி பெற்றால் இனிவரும் காலங்களில் நேரடியாக ஆன்லைனில் ரிலீஸ் ஆகும் படங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.