சில்க் ஸ்மிதா தமிழ் சினிமாவின் ஆச்சரிய நடிகை. தமிழ் சினிமாவில் நடிக்க சிகப்பான கதாநாயகியாக வேண்டும் என்று மும்பையில் இருந்து மாடலிங் அழகிகளை புதிது புதிதாக அறிமுகப்படுத்தும் தற்போதுள்ள தமிழ் சினிமா மத்தியில், ஆந்திராவில் காக்கி நாடா அருகே குக்கிராமத்தில் பிறந்து தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத கவர்ச்சி நடிகை மற்றும் கவர்ச்சி கதாநாயகியாகவும் கருப்பு அழகியாகவும் ஜொலித்தவர் சில்க் ஸ்மிதா.

வண்டிச்சக்கரம் படத்தின் மூலம் நடிகர் வினுசக்ரவர்த்தியால் அறிமுகம் செய்யப்பட்ட சில்க்கிற்கு சிலுக்கு என்று சொன்னால் கிறுக்கு பிடிக்கும் அளவுக்கு அப்போதைய வாலிப பருவத்தினர்  சில்க் சில்க் என்று புலம்பும் அளவு பல்க் ஆன ரசிகர்கள்  இருந்தனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்கள் அனைவருடனும் ஒரு சிறு பாடல் காட்சியிலாவது வந்து விடுவார். அங்க அசைவுகள் மட்டுமின்றி கண்களாலேயே கவர்ச்சி விருந்து படைத்தவர் சில்க்.

அந்த நாட்களில் ரஜினி, கமல், மோகன், ராமராஜன் கால்ஷீட், இளையராஜா இசை என்று சினிமா வியாபாரம் ஆக விரும்பப்பட்ட இந்த நபர்களோடு சேர்த்து சில்க்கிற்கும் ஒரு கேரக்டர் அல்லது வலிந்து திணிக்கப்பட்ட பாடல் காட்சியையாவது படத்தில் சேர்த்து சில்க்கிற்கு ஒரு கேரக்டர் கொடுக்கப்பட்டு விடும்.

இதையும் படிங்க பாஸ்-  டி.இமான் இசையில் எம்.ஜி.ஆர் நடிக்கும் புதிய படம் ரசிகர்கள் ஆர்வம்

சில்க் படத்தில் வருவது வியாபார ரீதியாக விரும்பப்பட்டிருந்தது.ஏன் என்றால் ரசிகர்கள் கூட்டம் அதிகம்.

சகலகலா வல்லவன் படத்தில் இடம்பெற்ற நேத்து ராத்திரி யம்மா பாடல் சில்க்கிற்கு ஒரு பெரிய பிரேக். சில்க் பல படங்களில் நடித்திருந்தாலும் சில்க் என்று சொன்னவுடன் பட்டென்று மனதில் பளிச்சிடுவது அந்த பாடலேயாகும்.

மிக கிளாமரான பாடல்கள் பலவற்றில் நடித்திருக்கிறார் 80களின் படங்களின் பாடல்களில் சில்க் காட்டிய தாராள கவர்ச்சி ரசிகர்களை கிறங்க வைத்து கட்டிப்போட்டுள்ளது அந்த ரசிகர்கள் இப்போது 45ல் இருந்து 50 ஐ தாண்டியவர்களாக இருப்பார்கள்.

பிரபுவுடன் நடித்த கோழி கூவுது படத்தில் சிறந்த கதாநாயகியாக நடித்திருப்பார்.பூவே இளைய பூவே பாடல் சில்க்கின் காட்சிகளுக்காகவும் இளையராஜாவின் இசைக்காகவும் அதிகம் ரசிக்கப்பட்ட பாடல் ஆகும்.

இதையும் படிங்க பாஸ்-  நம்மள காமெடி பீசுன்னு நினைச்சிட்டாங்களா?- யாஷிகா கமெண்ட்

பிரபுவுடன் இணைந்து கதாநாயகியாக நடித்த சூரக்கோட்டை சிங்ககுட்டி படத்தின் காளிதாஸன் கண்ணதாசன் பாடலும் இனிமை ப்ளஸ் கவர்ச்சி நிறைந்த பாடல் ஆகும்.

சில்க் கவர்ச்சி படங்களில் நடித்தாலும் குணச்சித்திர வேடத்திலும் நடிக்க தவறவில்லை. கவர்ச்சியே இல்லாமல் அவர் நடித்த அலைகள் ஓய்வதில்லை திரைப்படம் மிகுந்த வரவேற்பை பெற்ற படம்.

அது போல் இசைஞானி இளையராஜா நிறுவனத்தின் சொந்த தயாரிப்பான பாவலர் கிரியேசன்ஸின் கொக்கரக்கோ படத்திலும் சில்க் சிறந்த குணச்சித்திர நடிகை என்பதை ஒரு குப்பத்து கேரக்டரில் நிரூபித்திருப்பார்.

இதன் மூலம் சிறந்த கவர்ச்சி நடிகை மட்டும் தான் அல்ல தான் ஒரு சிறந்த குணச்சித்திர நடிகை என்பதையும் நிரூபித்திருப்பார் சில்க் ஸ்மிதா.

ப்ளே கேர்ள்ஸ் உட்பட  மலையாள அடல்ஸ் ஒன்லி படங்களில் நடித்து மலையாளத்திலும் முன்னணி கவர்ச்சி நடிகையாக வலம் வந்தார்.

இதையும் படிங்க பாஸ்-  இதோ உருவானது ஓவியா ஆர்மி தற்கொலைப் படை

கவர்ச்சி மட்டுமல்ல எந்த வேடமும் தரிக்க தயார் என்பதே சில்க்கின் நிலைப்பாடு. இவ்வளவு மகிழ்ச்சியாக வாழ்ந்த நடிகையின் சொந்த வாழ்க்கை சூனியமானது. ஒரு தாடிக்கார நபருடன் கடைசி காலக்கட்டத்தில் அதிகம் கிசு கிசுக்கப்பட்டார் சில்க். வாரா வாரம் எல்லா சினிமா பத்திரிக்கையிலும் அந்த தாடிக்காரர் பற்றிய கிசு கிசுவே அதிகம் இருக்கும். அவரை பற்றிய விசயங்களிலும் கூறப்படும் அனைத்தும் மர்மம் ஆகவே இன்று வரை இருக்கிறது. சில்க் ஸ்மிதாவின் திடீர் தற்கொலையும் சினிமா உலகினரை மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

சில்க்கின் கதை திரைப்படமாகவும் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது தன் வாழ்க்கையை சினிமாவாக எடுக்கும் அளவுக்கு வரலாற்றை ஏற்படுத்தி குறைந்த வயதிலேயே மறைந்தவர் சில்க் ஸ்மிதா அவர்கள்.

வெளியுலகில் மிகுந்த அன்பாகவும் பரிவாகவும் பழகக்கூடிய அப்பாவியான நடிகை சில்க் என்பது குறிப்பிடத்தக்கது.

சில்க் கடந்த 96ம் ஆண்டு இதே நாளில் மறைந்தார்.