Actor Simbu – கௌதம் கார்த்திக் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தில் நடிகர் சிம்பு வில்லன் வேடத்தில் நடிக்க உள்ளார்.

வந்தா ராஜாவாதான் வருவேன் படத்திற்கு பின் தன் உடலை குறைக்க இங்கிலாந்து சென்றார் சிம்பு. அதன்பின் ஹன்சிகா நடிக்கும் மஹா படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் அவர் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

மேலும், வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் அவர் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூலை 23ம் தேதி தொடங்கவுள்ளது.

இந்நிலையில், தற்போது கௌதம் கார்த்திக் நடிக்கும் புதிய படத்தில் கேங்ஸ்டர் வேடத்தில் சிம்பு நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கர்நாடகாவில் நடைபெற்று வருகிறது. இப்படத்தை கன்னடத்தில் வெளியான ‘மப்டி’ படத்தை இயக்கிய நர்த்தன் இயக்கி வருகிறார்.