முன் கூட்டியே மிக உஷாராக சிந்தித்து பேசும் சிம்பு

சிம்புவின் AAA படம் வரும் முன்பே அந்த படத்தை பற்றி சிம்பு கொடுத்த பில்டப்கள் அனைவரும் அறிந்த விசயங்களே. படம் வந்த பிறகு விமர்சகர்கள் படத்தை பற்றி வறுத்தெடுக்க தொடங்கினர் குறிப்பாக படம் வருவதற்கு முன்பு சிம்பு கொடுத்த பேட்டியும் வந்த பிறகு தயாரிப்பாளரின் பேட்டியும் அனைவரும் அறிந்த விசயங்களே.

இரண்டு நாட்களுக்கு முன் செக்க சிவந்த வானம் படம் பற்றி மேடையில் பேசிய சிம்பு முதலில் படம் பேசும் பின்பு நான் பேசுவேன் என்றிருக்கிறார்.

ஏனென்றால் இப்போது வரும் மிகப்பெரும் படங்கள் அனைவராலும் எதிர்பார்க்க கூடிய படங்கள் யாருமே எதிர்பார்க்காமல் போய் விடுகின்றன.

சிம்புவின் AAA  படத்தின் முன்கூட்டிய பேட்டி, லிங்குசாமி இயக்கிய அஞ்சான் படத்தின் முன் கூட்டிய பில்டப் பேட்டிகள், பலத்த எதிர்பார்ப்பை மீறி தோல்வியடைந்தது. முன் கூட்டியே இவர்கள் கொடுத்த மிகப்பெரிய பில்டப் பேட்டிகளால் நெட்டிசன்கள் மற்றும் விமர்சகர்களால் வறுத்தெடுக்கப்பட்டனர்.

அதனால் சிம்பு பேசிய முதலில் படம் பேசும் பின்பு நான் பேசுவேன் என்ற வார்த்தை முன் கூட்டியே எதையும் ஆரவாரமாக சொல்லாமல் படம் வரட்டும் பார்த்துக்கொள்வோம் என்ற ரீதியிலேயே உள்ளது.