விஜய் நடிப்பில் உருவாகி வரும் சர்க்கார் படத்தின் போஸ்டரில் அவர் சிகரெட் பிடிப்பது போல் காட்சியுடன் அந்த போஸ்டர் இருந்தது.

இதற்கு பலத்த எதிர்ப்பை பலர் தெரிவித்தனர். ஏற்கனவே பாபா படத்தின் மூலம் ரஜினியிடம் விவாதம் செய்த பாமக அன்புமணி இம்முறை விஜயிடம் மோதினார்

இதுபோல போஸ்டர்கள் தவறு என்று சுட்டிக்காட்டினார். சுகாதாரத்துறையின் வலியுறுத்தலின் பேரில் இந்த படத்தின் போஸ்டரும் சமீபத்தில் நீக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த படத்தின் போஸ்டருக்கு உயர்நீதிமன்றமும் தன் கண்டனத்தை தெரிவித்தது.

விஜய்க்கு சிம்புவின் தந்தை டி.ஆரும் தனது ஆதரவை தெரிவிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் இப்பட போஸ்டர் விவகாரம் பற்றி பொது மேடையில் அன்புமணியுடன் விவாதிக்க தயார் என சிம்பு தெரிவித்துள்ளார். இப்படியாக ஒரு போஸ்டருக்காக பலவிதமான போர்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.