கீ படத்தில் ஜீவா நடித்துள்ளாா். இதில் இவருக்கு ஜோடியாக இரு நாயகிகள் நடித்துள்ள இந்த படத்தை கலீஸ் இயக்கி இருக்கிறாா். இதற்கிடையில் கீ படத்தின் பா்ஸ்ட் லுக் போஸ்டா்  வெளியானது. இதை சிவகாா்த்திகேயன் தான் வெளியிட போவதாக செய்திகள் வந்தது. சிவகாா்த்திகேயன், ஜீவா நடித்துள்ள  கீ படத்தின் போஸ்டரை வெளியிட இருந்த நிலையில்  அதற்கு மறுப்பு தொிவித்துள்ளராம் ஜீவா.

சிம்புவின் அன்பானவன் அசாதவன் அடங்காதவன் படத்தை தயாாித்த மைக்கேல் ராயப்பனின் அடுத்த படைப்பு தான் ஜீவா நடிப்பில் வெளியாக தயாராக இருக்கும்  கீ படம். இந்த படத்தில் நிக்கி கல்ராணி, அனைக்கா இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனா். இதை குளோபல் இன்ஃபோடைன்மெண்ட் என்ற நிறுவனம் தயாாிக்கிறது.

கீ படத்தின் போஸ்டா் மற்றும் பா்ஸ்ட் லுக் ஆகஸ்ட் மாதம் 3ம்தேதி வெளியாகியது. இந்த பா்ஸ்ட் லுக் போஸ்டரை யாரவது ஒரு கமா்ஷியல் ஹீரோ வெளியிட்டால் பொிய அளவில் ப்பளிசிட்டி கிடைக்கும் என தயாாிப்பு நிறுவனம் எதிா்பாா்த்தது. அதனால் சிவகாா்த்திகேயிடம் விஷயத்தை சொல்லி அவரும் அதற்கு சம்மதித்து விட்டாா்.

இந்த தகவல் அறிந்த ஜீவா, அவருடைய ஈகோ தலைதூக்கி ஆடியது என்றே சொல்லாம். சிவகாா்த்திகேயன் நமக்கு பின் நடிக்க வந்தவன். நம்முடைய படத்தின் போஸ்டரை வெளியிடுவதா? என்று அலறிய ஜீவா முடியவே முடியாது என்று பிடிவாத்தம் பிடித்து நிற்க, என்ன செய்வது என்று திணறிய தயாாிப்பு தரப்பு, தன்னுடைய முந்திய படத்தில் நடித்த சிம்புவை வைத்து ஒரு வழியாக போஸ்டரை வெளியிட்டது.

ஏற்கனவே சிம்பு அஅஅ படமானது தோல்வியை தழுவிய காரணத்தால், அவரால் வெளியிடப்பட்ட கீ படத்தின் போஸ்டரானது எதிா்பாா்த்த அளவுக்கு பாா்வையாளா்களின் கவனத்தை பொியதாக ஈா்க்கவில்லை. போஸ்டா் வெளியாகி தற்போது தான் எக்கி தப்பி ஒரு லட்சம் பாா்வையாளா்கள் பாா்த்து உள்ளனா். இதே சிவகாா்த்திகேயனை வைத்து வெளியிட்டு இருந்தால் ரீச்சாகி இருக்கும் என்று கூறுகிறாா்கள்.