செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 26

விஷாலை கட்டித் தழுவிய சிம்பு…

08:17 மணி

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

நடிகர் சங்க தேர்தலில் விஷால் அணியினர் போட்டியிட்ட போது, நடிகர் சங்கத்திற்கு என புதிய கட்டிடத்தை கட்டுவோம் என உறுதி மொழி அளித்திருந்தனர். அதன்படி, தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிய அணி பொறுப்பேற்று 18 மாதங்கள் கழித்து தற்போது, சென்னை தி.நகரில் பிரம்மாண்டமாக அமையவுள்ள புதிய கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழா இன்று நடைப்பெற்றது.

இந்த விழாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர். இந்த கட்டிடத்திற்காக நடிகர் விஷாலும், கார்த்தியும் சேர்ந்து ரூ.10 கோடி நன்கொடையாக கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், நடிகர் சங்க தேர்தலில் விஷால் அணிக்கு எதிராக பகீரங்கமாக பல கருத்தை கூறியதோடு, அவர்களை எதிர்த்து களம் இறங்கி தோல்வியை சந்தித்த நடிகர் சிம்பு, இதில் கலந்து கொள்ளமாட்டார் எனக் கூறப்பட்டது.

ஆனால், திடீர் திருப்பமாக இந்த நிகழ்ச்சியில் அவர் இன்று கலந்து கொண்டார். மேலும், நடிகர் விஷாலை கட்டித் தழுவி தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார். இதன் மூலம், நடிகர் விஷாலு, சிம்புவிற்கும் இடையே இருந்த பனிப்போர் முடிவிற்கு வந்துள்ளதாக, அங்கிருந்த நடிகர் பேசிக் கொண்டனர்.

(Visited 55 times, 1 visits today)
The following two tabs change content below.
மகாலட்சுமி
இவர் இணையதள செய்திகள் பிரிவில் 5 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். சினிமா மட்டுமல்லாமல் தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய சம்பவங்களை உடனுக்குடன் கொட்டுப்பதில் முதன்மையானவர். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிப்பெயர்ப்பதில் சிறப்பு புலமை வாய்ந்தவர். சினிமா துறையில் முக்கிய நிகழ்வுகள் மற்றும் பழம்பெரும் நடிக- நடிகைகள், இயக்குனர்கள் குறித்த சுவையான சம்பவங்களை தொகுத்து சிறப்பு கட்டுரைகளாக வழங்குவதில் பெயர் பெற்றவர். தொடர்புகொள்ள- mahamurugan@gmail.com