Home சற்றுமுன் யுவன் எனக்கு அப்பா மாதிரி

யுவன் எனக்கு அப்பா மாதிரி

யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில், இளன் இயக்த்தில், ஹரிஷ் கல்யாண் – ரைசா வில்சன் நடித்துள்ள படம் `பியார் பிரேமா காதல்’. ஞாயிற்றுக்கிழமை சென்னையில் இந்த திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழா நடந்தது.

இசைஞானி இளையராஜா கலந்து கொண்டு படத்தின் இசையை வெளியிட்டார். தமிழ் சினிமாவின் மிக முக்கிய பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர்.

இந்த விழாவில் சிம்பு பேசுகையில். “இது இசை வெளியீடு மாதிரி இல்லாமல் சினிமா பிரபலங்களின் கெட் டூ கெதர் மாதிரி இருக்கிறது. நானும், யுவனும் எல்லா விஷயத்திலும் ஒரே மாதிரி தான். யுவன் எனக்கு அப்பா மாதிரி, அப்பா மாதிரி என்னை பார்த்துக் கொள்வார். எதிரி கூட நல்லா இருக்கணும்னு நினைப்பவர் யுவன். அவருக்காக சேர்ந்த கூட்டம் தான் இது என்றார்.

இந்த விழாவில் பேசிய ஜி.வி.பிரகாஷ் குமார் பேசுகையில், “முதல் முறையாக யுவன் ஒரு படம் தயாரித்திருக்கிறார். நான் ஏற்கனவே படம் தயாரித்திருக்கிறேன். அந்த அனுபவத்தில் அவருக்கு ஆதரவாக இங்கு வந்திருக்கிறேன். அவரின் சர்வம் ஆல்பம் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் எனக்கு ஒரு இன்ஸ்பிரேஷன். பின்னணி இசையில் யுவன் ஒரு ராஜா. சமீபத்தில் கூட பேரன்பு பின்னணி இசை மிகச்சிறப்பாக இருந்தது என்றார்