Home Breaking News in Tamil | முக்கிய செய்திகள் வில்லனாக நடிக்கும் சிம்பு!

வில்லனாக நடிக்கும் சிம்பு!

நடிகர் சிம்புவை வைத்து வெங்கெட் பிரபு இயக்க உள்ள மாநாடு படத்தில் சிம்பு வில்லன் வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன். இதனையடுத்து சிம்பு செக்கச்சிவந்த வானம் என்ற படத்தில் நடித்தார். மணிரத்தினம் இயக்கியுள்ள இந்த படம் வரும் செப்டம்பர் 28-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில் அடுத்ததாக சிம்பு வெங்கெட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்கவுள்ளார். சிம்பு நடிப்பில் உருவாகும் முதல் அரசியல் படம் இதுவாகும். இதில் சிம்பு வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளார். ஏற்கனவே இயக்குநர் வெங்கெட் பிரபு, நடிகர் அஜித்தை வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்க வைத்த மங்காத்தா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை தந்தது குறிப்பிடத்தக்கது. மாநாடு படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.