என்னை நம்பவைத்து ஏமாற்றிய விஜய்பட இயக்குனர்- நந்திதா வேதனை

இயக்குனர் சிம்பு தேவன் தன்னை நம்பவைத்து ஏமாற்றிவிட்டதாக நடிகை நந்திதா கூறியுள்ளார்.

அட்டக்கத்தி படத்தின் மூலம் அறிமுகம் ஆன்வர் நந்திதா. தொடர்ந்து இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா,முண்டாசுப்பட்டி உப்பு கருவாடு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். விஜய் நடித்த புலி படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்திருப்பார் நந்திதா. இது குறித்து அவர் கூறியபோது, புலி படத்தில் விஜய்க்கு ஜோடி என்று சொல்லி சிம்பு தேவன் என்னை ஒப்பந்தம் செய்தார். மேலும் ஸ்ருதிஹாசன், ஹன்சிகாவுக்கு இணையாக என்னுடைய கேரக்டரும் இருக்கும் என்றும் சொன்னார் இயக்குநர் சிம்புதேவன். ஆனால், ஒரு சிறுவேடமே கொடுத்து என்னை ஏமாற்றிவிட்டார் சிம்புதேவன் என்று கூறினார்.