காமெடி நடிகா் தாடி பாலாஜி தற்போது விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு ரியாலிட்டி ஷோவில் நடுவராக இருந்து வருகிறார். தாடி பாலாஜியும் அவரது மனைவி நித்யாவும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். அண்மையில் நடிகா் சிம்பு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.இந்நிலையில் தாடி பாலாஜியையும் அவரது மனைவி நித்யாவையும் சேர்த்து வைக்கும் முயற்சியில் சிம்பு ஈடுபட்டுள்ளார்.

தாடி பாலாஜி மீது அவா் மனைவி நித்யா போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அவா் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும், ஏற்கனவே திருமணமானவா் என்பதை மறைத்து தன்னை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் எனவும் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பின் அவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். தனது பெண் குழந்தையுடன் தனது அம்மா வீட்டில் வசித்து வருகிறார். இவா்கள் இருவரையும் சேர்த்து வைக்கும் முயற்சியில் பலரும் ஈடுபட்டு வந்தனா். ஆனால் அந்த முயற்சி எதும் பலனளிக்கவில்லை.

இந்நிலையில் இந்த பிரச்சனை குறித்து நடிகா் சிம்பு பாலாஜி மனைவியிடம் தொலைபேசியில் ஒரு மணிநேரம் பேசியுள்ளார். உங்கள் குழந்தைக்காக சேர்ந்து வாழுங்கள், மேலும் எனக்காக பாலாஜியிடம் சேர்ந்து வாழுங்கள் என்று தாடி பாலாஜி மனைவி நித்யாவிடம் பேசியுள்ளார். இனிமேல் அவர் மீது எதாவது தவறு இருந்தால் நான் உங்கள் பக்கம் தான் இருப்பேன் என்று பேசியுள்ளராம். ஆனால் இது பற்றி நித்யா எந்தவொரு முடிவும் எடுக்கவில்லையாம்.