நடிகர் சிம்பு தான் நடிக்கவுள்ள புதிய படத்தில் பவர்புல் டீமுடன் களம் இறங்குகிறார்.

சிம்பு நடித்து கடைசியாக வெளியான அன்பானவன் அடங்காதவன் அசாராதவன் படுதோல்வி அடைந்தது. அதையடுத்து, தனது அடுத்த படம் பற்றி வாய் திறக்காமல் இருந்தார் சிம்பு. அதன் பின், பில்லா 3 அல்லது கெட்டவன் என்கிற தலைப்பில் அவர் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் என செய்திகள் வெளியானது. ஆனால், அதை சிம்பு உறுதி செய்யவில்லை.

இந்நிலையில், ஒரு புதிய படத்தில் அவர் நடிக்க இருப்பதாகவும், அப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாகவும், எடிட்டராக ஆண்டனியும் பணிபுரிவதாக இன்று காலை டிவிட் செய்திருந்தார். இந்நிலையில், இப்படத்தில் ஒளிப்பதிவாளராக தேசிய விருது பெற்ற சந்தோஷ் சிவன் பணியாற்ற உள்ளதாக அவர் மேலும் ஒரு டிவிட் செய்துள்ளார்.

எனவே, வெற்றியை கருத்தில் கொண்டே, பவர்புல் டீமுடன் களம் இறங்கும் சிம்பு, அதில் வெற்றிவாகை சூடுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த படம் ஒரு ஆங்கில படம் போல் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.