யாரும் எதிர்பார்க்காத வகையில் மணிரத்னத்தின் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அவர்மட்டுமில்லாமல், விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, பஹத் பாசில், நானி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் என ஒரு நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடிக்கவுள்ளது. இந்நிலையில், மணிரத்னம் படத்தில் சிம்பு நடிப்பது குறித்து டி.ராஜேந்தர் கூறும்போது,

இயக்குனர் மணிரத்னத்தின் அண்ணன் ஜி.வி.யும் நானும் நெருங்கிய நண்பர்கள். மணிரத்னமும் எனது நண்பர்தான். கடந்த செப்.2-ந் தேதி குருபெயர்ச்சியன்று மணிரத்னம் தன்னை வந்து பார்க்கச் சொன்னதாக சிம்பு என்னிடம் சொன்னார். ரஜினி, கமல் போன்ற மிகப்பெரிய நடிகர்களை வைத்து வெற்றிப் படங்களை கொடுத்தவர், ஆஸ்கர் விருது வாங்கி தமிழகத்திற்கு பெருமை சேர்ந்த ஏ.ஆர்.ரகுமானை அறிமுகப்படுத்தியவர்.

அந்த வகையில் பார்த்தால் மணிரத்னம் குரு ஸ்தானத்தில் இருப்பவர்தான். எனவே, உனக்கு சரியென்று பட்டால் போய் பார்த்துவிட்டு வா என்று சொல்லி அனுப்பியதாக கூறினார். அந்த குருப்பெயர்ச்சியின் போது நடந்த சந்திப்புதான், மணிரத்னத்தையும் சிம்புவையும் சேர்த்ததாக டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.