மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள புதிய படம் ஒன்றின் படப்பிடிப்பு இம்மாதம் 20ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்த தகவலை சிம்புவும் படக்குழுவினர்களும் உறுதி செய்துள்ளனர்.

மணிரத்னம் அவர்களின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை ஃபர்ஸ்ட் காப்பி என்ற அடிப்படையில் லைகா நிறுவனம் மணிரத்னம் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது

சிம்பு, விஜய்சேதுபதி, நித்யாமேனன், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில் உருவாகும் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது