கடந்த சில நாட்களுக்கு முன் சிம்புவின் இசையில் ஓவியா ஒரு பாடலை பாடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் முதன்முதலாக இருவரும் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றவுள்ளனர்.

அனிதா உதீப் என்ற இயக்குனர் இயக்கவுள்ள 90ml என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் ஓவியா நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு இசையமைக்க சிம்பு ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரும் இதனை உறுதி செய்துள்ளது.

நிவிஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கு அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவும், அந்தோணி எடிட்டிங் பணியும் செய்யவுள்ளனர். இந்த படம் ஒரு லெஸ்பியன் சம்பந்தப்பட்ட கதை என்று கூறப்படுகிறது.