நடிகர் சிம்புவின் புதிய தோற்றம் கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத் தோல்விக்கு பின் நடிகர் சிம்பு பொது இடங்களில் தலை காட்டுவதில்லை. டிவிட்டர் பக்கத்தில் இருந்தும் வெளியேறினார்.

அந்நிலையில், அவர் ஒரு ஆங்கில படத்திலும் நடிக்க இருக்கிறார் எனவும் கூறப்பட்டது. மேலும், இயக்குனர் மணிரத்னம் படத்திலும் அவர் நடிக்கிறார் என்ற செய்திகள் வெளிவந்தது.

இந்நிலையில், தற்போது சிம்பு தனது ஹேர் ஸ்டலை மாற்றியிருக்கிறார். மொஹாக் ஹேர்கட் என அழைக்கப்படும் அந்த தோற்றத்தில் அவர் மிகவும் வித்தியாசமாக காணப்படுகிறார்.

மணிரத்னம் படத்தில்தான் அவர் இந்த தோற்றத்தில் நடிக்கிறாரா என்கிற சந்தேகம் பலருக்கும் ஏற்பட்டது. ஆனால், இது அவர் நடிக்கவுள்ள ஆங்கில படத்தில்தான் அவர் இந்த தோற்றத்தில் நடிக்க இருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.