simbu

சிம்புக்கு தற்போது சொல்லி கொள்ளும்படியாக படங்கள் ஏதும் இல்லை. அச்சம் என்பது மடமையா படம் வெற்றியை கொடுத்தது. ஆனால் அன்பானவன், அசராதவன், அடங்காதவன் படமானது எதிர்பார்த்த வெற்றியை எட்டவில்லை. சிம்புவின் நடவடிக்கையிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. படப்பிடிப்புக்கு சரியான நேரத்திற்கு வருவது இல்லை. அவரது படங்கள் சமீபகாலாமாக தோல்வியை தான் சந்தித்து வருகிறது. சிம்புவின் செயல்பாடுகள் சரியாக இல்லாத காரணத்தால் தயாரிப்பாளர்கள் தரப்பு தொடர்ந்து நஷ்டத்தை அடைந்து வருவதால் இனிமேல் சிம்பவால் வெற்றி கனியை பறிக்க முடியாது என்று சினிமா வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டது.

இதற்கிடையில் சிம்பு நான் முன்பு மாதிரி இல்லை. மாறிவிட்டேன் என்று பவ்யமாக பேசி சினிமா வட்டாரத்திற்கு பதில் அளித்தார். இந்நிலையில் செக்க சிவந்த வானம் படத்தில் சிம்புக்கு நடிக்கும் வாய்ப்பு கிட்டியது. இந்த படத்தை மணிரத்னம் இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. விஜய் சேதுபதி, அரவிந்தசாமி, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் என பெரிய நட்சத்திர கூட்டமே களம் இறங்கி நடித்துள்ளது. சிம்புக்கு இந்த படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார்.

செக்க சிவந்த வானம் படத்தை அடுத்து புதிய படமொன்றில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார்.மேலும் இதை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். இவர் ஏற்கனவே மிக மிக அவசரம் படத்தை இயக்கியதோடு மட்டுமல்லாமல் தயாரித்தும் இருந்தார். சுரேஷ் காமாட்சியின் படத்தை தொடர்ந்து விஜய்சந்தர், கவுதம் மேனன் இயக்கும் படங்களில் நடிக்க உள்ளார் சிம்பு.

மணிரத்னம் இயக்கும் படமான செக்க சிவந்த வானம் படத்திற்கு பிறகு தான் சிம்புவிற்கு சினிமா வாய்ப்புகள் வர தொடங்கி இருக்கிறது. இதற்கு காரணம் மணிரத்னம் படத்திற்கு பிறகு சிம்புவிடம் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கிறது. இதற்கு முன் படப்பிடிப்பு சரியான நேரத்திற்கு வராமல் லேட்டாகி வருவது என சிம்பு மீது ஏகப்பட்ட புகார்கள் இருந்த காரணத்தால் அவரை வைத்து படமெடுப்பதற்கு தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் தயங்கி வந்தனர். தற்போது அவரிடம் நல்ல மாற்றங்கள் நிகழ்ந்து உள்ளதால் அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது.