சிம்பு என்றாலே வதந்தியாகட்டும், சர்ச்சையாகட்டும் பஞ்சமே இருக்காது.அவர் திரையுலகில் வந்த காலம் முதல் இன்று வரை விதவிதமான டிசைன்களில் வதந்திகளை பரப்பி விடுகின்றனர்.

இந்தநிலையில் இன்று காலை முதல் சிம்பு குறித்து ஒரு செய்தி தீயாய் பரவியது. அது சிம்பு திருமணம் செய்யவிருப்பதாகவும், பெண் பார்த்து பேசி முடித்துவிட்டதகாவும் இணையத்தில் வைரலாக பரவியது. இதனால் சிம்பு ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். ஆனல் அது வத்ந்தி என்று பின்னர் தெரிய வந்தது.

இதையும் படிங்க பாஸ்-  மீடு: லேகா வாஷிங்டன் கூறுவது சிம்புவையா?

இது குறித்து சிம்பு விளக்கம் கொடுத்துள்ளார். அதில் இப்போதைக்கு திருமணம் செய்யும் எண்ணம் எதுவும் இல்லை என்றும், உரிய நேரத்தில் அது பற்றி அறிவிப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார்.