சிம்பு சிறுவயதில் இருந்தே அதாவது குழந்தை நட்சத்திரத்தில் இருந்தே சினிமாவில் இருந்து பலரால் அறியப்பட்டாலும் அவர் கதாநாயகனாக ஆனதில் இருந்து அவர் மீது தொடர்ந்து வரும் சர்ச்சைகள் ஏராளம் உதட்டை கடிப்பது போல நடித்து அதை போஸ்டராக வைத்தது, நடிகை நயன் தாராவை காதலித்தது அதன் பின் ஹன்சிகாவை காதலித்தது என அவர் மீதான ப்ளே பாய் இமேஜ் ஏராளம்.

பின்பு பீஃப் சாங் போட்டது என பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சிம்பு மீது வந்தது.

சமீபகாலமாக அவரிடம் சில நல்ல மாறுதல்கள் தென்பட தொடங்கி விட்டன. காவேரி பிரச்சினையில் அவர் சொன்னபடியே குறிப்பிட்ட நேரத்தில் தண்ணீர் கொடுத்து தங்கள் அன்பை வெளிப்படுத்தின.

இந்நிலையில் சமீபத்தில் சூப்பர் சிங்கரில் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட செந்தில் கணேசை இரவு 12 மணிக்கு அழைத்து ஒருநாள் வீட்டுக்கு விருந்துக்கு வரவேண்டும் என சிம்பு அழைத்ததாக கூறப்படுகிறது.