அட்லியின் அடுத்த படத்தில் சிம்பு

இளையதளபதி விஜய் நடித்து வரும் ‘தளபதி 61’ படத்தை இயக்கி வரும் இயக்குனர் அட்லி, ஜீவா, ஸ்ரீதிவ்யா நடித்து வரும் ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ என்ற படத்தை தயாரித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த படத்தை எம்.ஆர்.ராதாவின் பேரன் ஐக்கி இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இந்த படத்தின் பாடல்கள் வெளிவந்த பின்னர்தான் இந்த படத்தில் நடிகர் சிம்பு ஒரு பாடலை பாடியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. ஏக் காவ் மேய்ன் என்று தொடங்கும் இந்த பாடலை சிம்புவுடன் மானசியும் இணைந்து பாடியுள்ளார். இந்த பாடலை பா.விஜய் இயக்கியுள்ளார்.

சிம்பு மட்டுமின்றி இந்த படத்தின் பாடல்களை கங்கை அமரன், ஜி.வி.பிரகாஷ்குமார், அனிருத், பிரேம்ஜி, உள்ளிட்டோரும் பாடியுள்ளனர். சிம்பு உள்பட இவர்கள் அனைவருமே இசையமைப்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.