டைம் இல்ல என்ற படத்துக்கு சிம்பு ஒரு பாடல் பாடுகிறார்.  இப்படத்தை

கமல் ரசிகர் ஒருவர் இயக்குகிறார். அவரை போலவே நாத்திக கருத்துகளை பேசும் அவர் கதையையும் நாத்திக கருத்துடைய கதையாக சொல்லியுள்ளார்.

அம்மன் சிலையை கிண்டல் செய்ய போக 30 நாட்களில் உயிர் இழந்து விடுவாய் என்று அசரீரி குரல் ஒலிக்கிறது. அந்த 30 நாட்களை ஹீரோ எப்படி கடந்தார் என்பதை நகைச்சுவையாக சொல்லும் படம் இது. 30 நாட்களில் 15 நாட்களை ஜாலியாக கழிக்கிறார் ஹீரோ. அப்போது பாடுவது போன்ற பாடலை சிம்பு பாடவிருக்கிறார்.

உற்சாகமாக ஆட்டம் போடும் வகையிலும் அதே நேரத்தில் கருத்தோடும் எழுதப்பட்டிருக்கிறது பாடல்.

கதாநாயகன் மனு பார்த்திபனே தயாரிப்பாளராகவும் கால் பதித்துள்ளார்.