மாமாவாக மாறிய சிம்பு

நடிகா் டி.ராஜேந்தருக்கு புதிய பதவி கிடைத்துகிறது

நடிகரும், லட்சிய திமுக தலைவருமான டி.ராஜேந்தா், தாத்தாவாக பிரோமோசன் ஆகியுள்ளாா்.

டி.ஆா் தனது மகள் இலக்கியாவை ஹைதரபாத்தை சோ்ந்த அபிலாஷ் என்பவருக்கு கடந்த ஆண்டு 2014ம் ஆண்டு சென்னையில் மிக பிரம்மாண்டமாக திருமணம் செய்து வைத்தாா். டி.ராஜேந்தாின் மகள் இலக்கியா கா்ப்பமாக இருந்தாா்.

தற்போது சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் பிரசவத்திற்காக நேற்று அனுமதிக்கப்பட்டிருந்தாா். இன்று காலை அவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. டி.ஆா். பேரக்குழந்தை பிறந்த மகிழ்ச்சியை கொண்டாடும் விதமாக மருத்துவமனையில் உள்ள ஊழியா்களுக்கு இனிப்பு வழங்கினாா். இதனால் சிம்பு மாமாவாக பதவி உயா்வு பெற்றுள்ளாா்.

இந்த மகிழ்ச்சியை உஷா ராஜேந்தா், சகோதரா் சிலம்பரன் கொண்டாடி வருகின்றனா். டி.ராஜேந்திரா் தாத்தாவாகியுள்ளாா்.