சிம்புவின் பெரியார் குத்துக்கு எதிர்ப்பு கிளம்புமா?

சிம்புவின் பெரியார் குத்துக்கு எதிர்ப்பு கிளம்புமா?

சிம்பு நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘செக்கச் சிவந்த வானம்’. திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தில் உள்ளது. இந்த படத்தில் சிம்புவுடன் விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நடிப்பு மட்டுமின்றி பாடகர், இயக்குனர், இசையமைப்பாளர் என பல அவதாரம் எடுத்து வரும் சிம்பு தற்போது ஒரு தனி ஆல்பம் ஒன்றை பாடியுள்ளார். இந்த பாடலுக்கு ‘பெரியார் குத்து…’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்த பெரியார் குத்து பாடலுக்கு ரமேஷ் தமிழ்மணி இசைமைக்க மதன் கார்க்கி வரிகள் அமைத்துள்ளார். தீபன் பூபதி மற்றும் ரத்தீஷ் வேலு இந்த ஆல்பத்தை தயாரிக்கிறார்கள். தற்போது இந்த போஸ்டர் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. விரைவில் இந்த பாடல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பாடல் பீப் பாடலை போன்று சர்ச்சையை கிளப்புமா? என்பதை பாடல் வெளியாகும் வரி பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்