சாதியப் படம் எடுப்பதாக தொடர்ந்து விமர்சனம் வைக்கப்படும் முத்தையா இயக்கத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகத் தொடங்கியுள்ளன.

இயக்குனர் முத்தையா தான் எடுத்த எல்லாப் படங்களிலும் ஒருக் குறிப்பிட்ட சாதிப் புகழைப் பாடுவதாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. அதனால் அவர் மீது சாதி முத்திரை விழுந்துள்ளது. சமீபத்தில் அவர் இயக்கிய தேவராட்டம் படம் கூட விவாதங்களை எழுப்பியது.

ஆனாலும் அவர் படங்கள் நன்றாக வசூல் செய்வதால் அவர் இயக்கத்தில் நடிக்க ஹீரோக்கள் ஆர்வமாக உள்ளனர். இந்நிலையில் தேவராட்டம் படத்திற்குப் பிறகு முத்தையா இயக்கத்தில் சிம்பு நடிக்க இருப்பதாகவும் அதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்துள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

சர்ச்சைப் புகழ் இயக்குனரும் சர்ச்சைப் புகழ் நடிகருமான சிம்புவும் இணையும் படம் குறித்த சந்தேகங்கள் இப்போதே எழ ஆரம்பித்துள்ளன.