சிம்புவின் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தின் தோல்வியை அடுத்து அவர் தற்போது ஆங்கில படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் சந்தானம் ஹீரோவாக நடித்து வரும் ‘சக்க போடு போடு ராஜா’ என்ற படத்தின் மூலம் சிம்பு இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இந்த படத்தின் நான்கு பாடல்களை கம்போஸ் செய்த சிம்பு, இந்த பாடல்களை யுவன்ஷங்கர் ராஜா, அனிருத், டி.ராஜேந்தர் மற்றும் உஷா ராஜேந்தர் ஆகியோர்களை பாட வைத்துள்ளார்.

இந்த நிலையில் சிம்பு இசையில் யுவன்ஷங்கர் ராஜா பாடிய ‘காதல் தேவதை’ என்ற பாடல் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த பாடலின் மூலம் சிம்புவின் உண்மையான காதல் தேவதையை அவர் மறைமுகமாக கூறியிருக்கின்றாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்