நடிகை ஜோதிகா தான் நடிக்கும் காற்றின் மொழி படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க அழைத்ததால் தான் நடித்தேன் என நடிகர் சிம்பு கூறியுள்ளார்.

 

36 வயதினிலே,நாச்சியார்,செக்க சிவந்த வானம் படங்களைத் தொடர்ந்து நடிகை ஜோதிகா நடித்துள்ள படம் “காற்றின் மொழி”.இந்த படத்தை இயக்குனர் ராதா மோகன் இயக்கியுள்ளார்.மேலும் இப்படத்தில் விதார்த், லட்சுமி மஞ்சு, ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் ஒரு சிறிய காட்சியில் நடிக்க நடிகர் சிம்புவை அனுகியுள்ளார் ஜோதிகா.அவரும் கேட்டவாறு நடித்து கொடுத்துள்ளார்.சிம்புவும்,ஜோதிகாவும் மன்மதன் படத்தில் நடித்ததில் இருந்து பழக்கம்.மேலும் நடிகர் சிம்புவிற்கு நடிகை ஜோதிகாவை ரொம்ப பிடிக்குமாம்.

இது பற்றிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நடிகர் சிம்பு,நடிகை ஜோதிகா கேட்டுக்கொண்டதால் தான் இப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்தேன்,இந்த படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.