இரண்டு பாகங்களாக வெளியாகிறதா சிம்புவின் ஏஏஏ படம் ?

சிம்பு நடித்து வரும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படம் 2 பாகங்களாக வெளிவர வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.

திரிஷா இல்லனா நயன்தாரா படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் தற்போது நடிகர் சிம்புவை வைத்து ஏஏஏ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் சிம்பு மொத்தம் 3 விதமான தோற்றங்களில் நடிக்கிறார். இதில் மதுரை மைக்கேல் என்கிற தோற்றத்திற்கான படப்பிடிப்புகள் முடிந்துவிட்டன. அடுத்து அஸ்வின் தாத்தா என்கிற கதாபாத்திரத்திற்கான காட்சிகள் தற்போது படம்பிடிக்கப்பட்டு வருகிறது. அது இல்லாமல் இன்னொரு கெட்டப்பும் சிம்புவிற்கு இருக்கிறது.

இந்நிலையில், சிம்பு தனது டிவிட்டர் பக்கதில் “ஏஏஏ 1 டைமன்ஷன் 2017 ஜூன் ரம்ஜான் முதல்.. ஒரு மாற்றத்தினால் தாமதம் என்பதுதுதான் புதிய தகவல்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அப்படி எனில், ஏஏஏ படம் இரண்டு பாகங்களாக வெளிவருமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதற்கு சிம்புதான் பதிலளிக்க வேண்டும்.