சிம்பு-விஜய்சேதுபதி-அரவிந்த்சாமி-ஜோதிகா என மெகா கூட்டணியுடன் களமிறங்கும் மணிரத்னம்

மணிரத்னம் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த ‘காற்று வெளியிடை’ படத்திற்கு கலவையான விமர்சனங்கள் எழுந்தாலும், படம் ஓரளவுக்கு ஓடி லாபத்தை ஈட்டி கொடுத்தது. மணிரத்னம் ரசிகர்களுக்கு அந்த படம் ரொம்பவும் பிடித்துப் போனது என்றே சொல்லலாம்.

படம் வெளிவந்து சில மாதங்களே ஆகியுள்ள நிலையில், தன்னுடைய அடுத்த படத்திற்கு மணிரத்னம் தயாராகியுள்ளார். இந்த முறை மெகா கூட்டணியுடன் மணிரத்னம் களமிறங்கியுள்ளார்.

அதாவது, இப்படத்தில் நடிகர்களாக சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, மலையாள நடிகர் பஹத் பாசில், தெலுங்கு நடிகர் நானி ஆகியோர் நடிக்கின்றன. இவர்கள் அனைவரும் அவரவர் மொழிகளில் பெரிய நடிகர்களாக வலம் வருகின்றனர். இந்த மெகா கூட்டணியை தன் படத்தில் மணிரத்னம் அமைத்திருக்கிறார் என்றால் படத்தின் மீது இப்போதே எதிர்பார்ப்பு எகிற தொடங்கி விட்டது.

அதுமட்டுமில்லாமல் இப்படத்தில் ஜோதிகாவும், ஐஸ்வர்யா ராஜேஷும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மணிரத்னத்தின் ஆஸ்தான இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கும் இசையமைக்கிறார். இப்படத்தில் நடிக்கும் அரவிந்த்சாமியை தவிர வேறு யாரும் இதுவரை மணிரத்னத்தின் படத்தில் நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் கதை என்ன? இப்படத்தில் ஒவ்வொருவரின் கதாபாத்திரம் என்ன? என்பது போக போகத் தெரியவரும். அதுவரை அனைவரும் பொறுத்திருப்போம்.