நடிகர் சிம்புவின் தீவிர ரசிகர்களில் ஒருவராகிய சென்னையை சேர்ந்த மதன் என்பவர் கடந்த 10ஆம் தேதி திடீரென மரணம் அடைந்தார். அவருடைய மரணத்திற்கு சிம்பு இரங்கல் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மரணம் அடைந்த மதனுக்கு நினைவஞ்சலி போஸ்டரை அவருடைய நண்பர்கள் நேற்று ஒட்டி கொண்டிருந்தனர். இதனை நேற்றிரவு காரில் செல்லும்போது தற்செயலாக பார்த்த சிம்பு, உடனே காரில் இருந்து இறங்கி வந்து மதனின் நண்பர்களிடம் அந்த போஸ்டரை வாங்கி அவரே ஒட்டினார்.

சிம்புவை நேரில் பார்த்த அதிர்ச்சியில் இருந்தே மீண்டு வராத அவரது ரசிகர்கள் போஸ்டரை வாங்கி அவரே சுவற்றில் போஸ்டரை ஒட்டியதை பார்த்ததும் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.

தங்கள் நண்பர் மதனின் ஆத்மா நிச்சயம சாந்தியடையும் என்றும் இதுபோன்று ரசிகர்கள் மேல் அன்பு வைத்திருக்கும் வேறொரு நடிகரை பார்க்கவே முடியாது என்று அவர்கள் கூறினர்.