கடந்த 2007ஆம் ஆண்டு சரத்குமார், ஜோதிகா நடிப்பில் கவுதம்மேனன் இயக்கிய ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ படத்தில் ஜோதிகா நெகட்டிவ் கேரக்டரில் சூப்பராக நடித்திருந்தார். இந்த கேரக்டர் அவருக்கு பெரும் பாராட்டுக்களை பெற்றுக்கொடுத்த நிலையில் தற்போது இந்த கேரக்டருக்கு ஏற்கனவே இருவரை கவுதம் மேனன் அணுகியிருந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இதையும் படிங்க பாஸ்-  பேட்ட படத்தில் செம ஸ்டைலிஷ் ரஜினி - வெளியான புகைப்படம்

அந்த இருவர் சிம்ரன் மற்றும் தபு ஆகியோர்கள்தான். ‘சினேகிதியே’ படத்தில் தபுவும், ‘பார்த்தேன் ரசித்தேன்’ படத்தில் சிம்ரனும் கிட்டத்தட்ட நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருந்தாலும் இந்த படத்தில் இருவரும் நடிக்க மறுத்துவிட்டனர்

ஆனால் படம் வெளிவந்த பின்னர் இந்த கேரக்டருக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து இருவரும் வருத்தப்பட்டதாக சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளனர்.