பஞ்சு அருணாசலம் இயக்கிய நீதானா அந்தக்குயில் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் சின்னக்குயில் சித்ரா, பூஜைக்கேத்த பூவிது என்ற முதல் தமிழ்ப்பாடலே அனைவரிடமும் கொண்டு போய் சின்னக்குயில் சித்ராவை சேர்த்தது.

இருப்பினும் பாஸில் இயக்கி இசைஞானி இசையமைத்த பூவே பூச்சூடவா படத்தில் இடம்பெற்ற சின்னக்குயில் பாடும் பாட்டு கேட்குதா பாடல் மூலம் இவர் சின்னக்குயில் சித்ரா என்று இசை ரசிகர்களால் அழைக்கப்பட்டார்.

பாலச்சந்தர் இயக்கி இசைஞானி இளையராஜா இசையமைத்த சிந்துபைரவி படத்தின் பாடலான பாடறியேன் படிப்பறியேன் ,நானொரு சிந்து பாடல்கள் மூலம் தேசிய விருதை பெற்றார்.

இதையும் படிங்க பாஸ்-  இப்ப வர பாட்டுலாம் கேட்காதீங்க - இப்படி சொல்லி விட்டாரே இசைஞானி

மேலும் மின்சாரகனவு படத்தின் மானாமதுரை மாமரக்கிளையிலே, மற்றும் ஆட்டோகிராஃப் படத்தின் தன்னம்பிக்கை பாடலான ஒவ்வொரு பூக்களுமே பாடலுக்காகவும் தேசிய விருது பெற்றார்.

தமிழ், மலையாளம், கன்னடம்,தெலுங்கு என பல மொழிகளில் பல்வேறு விருதுகளை பெற்றும் பல பக்தி பாடல் ஆல்பங்களை பாடியும் இன்றுவரை மிக பிஸியான பாடகியாக இருந்து வருகிறார்.

இதையும் படிங்க பாஸ்-  ராதாமோகன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, பிரகாஷ்ராஜ், சமுத்திரக்கனி இணையும் படத்தின் பெயர்

சித்ரா புருஷ லட்சணம் படத்தில் தேவா இசையில் பாடிய கோலவிழியம்மா என்ற 108 அம்மன் பக்தி பாடல் மிக புகழ்பெற்ற பாடலானது அதே போல் ராஜராஜேஸ்வரி படத்தில் இடம்பெற்ற பல்வேறு அம்மன் நாமம் கொண்ட மருவத்தூர் ஓம்சக்தி பாடல்தான் ஆடிமாதம் முழுவதும் அம்மன் கோவிலில் ஒலிக்கும் இனிய கீதமாகும்.

கேரள அரசின் சார்பில் சிறந்த பாடல் கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் அரிவராசனம் என்ற பெயரில் விருது வழங்கப்படுகிறது.
2018-ம் ஆண்டுக்கான விருது பாடகி சித்ராவுக்கு வழங்கப்பட்டது.

சித்ராவின் பாடல்கள் அனைத்தும் இசை ரசிகர்களால் விரும்பி கேட்கப்படுபவை தேன் சொட்டும் சுவையுடையவை.

இதையும் படிங்க பாஸ்-  இளையராஜா இசையில் விஜய் ஆண்டனி...

உன் பார்வையில் ஓராயிரம், தேவனின் கோயில் மூடிய நேரம், ஒரு கிளியின் தனிமையிலே, மதுர மரிக்கொழுந்து வாசம், கண்ணாளனே எனது கண்ணை, ஒவ்வொரு பூக்களுமே சமீபத்தில் வந்த கொஞ்சி பேசிட வேணாம் வரை அனைத்தும் சித்ராவின் குரலில் தேன் சொட்டும் பாடல்களாகும்.