கேரளாவின் முன்னணி பாடகர் மற்றும் இசையமைப்பாளர் பாலா பாஸ்கர், இவர் திருச்சூரில் உள்ள கோவிலுக்கு சாமி தரிசனம் செய்துவிட்டு காரில் குடும்பத்துடன் திரும்பி கொண்டிருந்தார்

அவரின் ஓட்டுநர் காரை ஓட்டி வந்துள்ளார். காரில் பாலாபாஸ்கர் அவரின் மனைவி லட்சுமி மற்றும் மகள் தேஜஸ்வி ஆகியோர் பயணம் செய்துள்ளனர்.

இதையும் படிங்க பாஸ்-  மிகப்பெரும் எதிர்பார்ப்பில் இன்று ரிலீஸ் ஆகிறது நிவின்பாலியின் காயம் குளம் கொச்சுண்ணி

விடியற்காலை 4.30 மணியளவில் கார் திருவனந்தபுரம் அருகே சென்றுகொண்டிருந்தபோது மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

பலத்த காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.மகள் தேஜஸ்வி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். பாலா பாஸ்கர், அவரது மனைவி ,கார் டிரைவர் சிகிச்சை பெற்று வருகின்றனர்