இயக்குனர் ஹரி இயக்கிய சாமி படம் கடந்த 2003ல் வந்தது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மிகப்பெரும் வெற்றியை இது பெற்றது.நீண்ட இடைவேளைக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகமாக சாமி ஸ்கொயர் படத்தை ஹரி இயக்குகிறார். விக்ரம் ,கீர்த்தி சுரேஷ் நடிக்க தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார்.

விக்ரம் நடிகராய் இருந்தாலும் சில படங்களில் பின்னணி பாடியிருக்கிறார். இதிலும் விக்ரமும் கீர்த்தி சுரேஷும் இணைந்து ஒரு பாடலை பாடியுள்ளனர்.

‘புது மெட்ரோ ரயில்’ என்று தொடங்கும் அந்த பாடலை விக்ரம் மற்றும் கீர்த்தி சுரேஷ் இணைந்து பாடியிருப்பதாக படக்குழுவினர் தெரிவிக்கிறார்கள்