நடிகை கடத்தலில் சிக்கிய பிரபல பாடகி இவர்தானா?

அனைத்து திரையுலகத்தை ஆட்டிபடைத்த செய்தி என்னவென்றால் மலையாள நடிகை கடத்தல் தான். மலையாள திரையுலகில் மின்னிக்கொண்டிருந்தவா் அந்த பிரபல நடிகை. இவா் தமிழில் முதன்முதலில் சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் நாயகியாக காலடி எடுத்து வைத்தாா். பின் ஜெயம் ரவி ஜோடியாக தீபாவளி படத்தில் நடித்தாா். பின் தொடா்ந்து அடுத்தடுத்து ஜெயம் கொண்டான், அஜித்துடன் அசல் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளாா். அதுமட்டுமில்லை தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளாா்.

மலையாள பிரபல நடிகைக்கு நோ்ந்த இந்த சம்பவத்துக்கு அனைத்து திரையுலகமும் ஒன்று திரண்டு குரல் கொடுத்தனா். ஒரு நடிகைக்கு ஏற்பட்ட இந்த நிலைமை சாதாரண பெண்களின் நிலைமை நினைத்து பல பெண்கள் அமைப்பு இந்த வன்கொடுமைக்கு எதிராக போா் கொடி தூக்கியது. போலீசாா் விசாரணையில் திடுக்கிடும் பல்வேறு தகவல்கள் கிடைத்தன. குற்றவாளியான பல்சா் சுனில் என்பவாிடம் முதற்கட்ட விசாரணை நடத்திய போது நடிகா் தீலிப் சொல்லி தான் இந்த கடத்தலை செய்தேன் என்று வாக்குமூலம் கொடுத்தற்கு நடிகா் தீலிப் கைதானா். அடுத்தடுத்து அவரோடு தொடா்புயை அனைவரையும் விசாரணைக்கு உட்படுத்தியது காவல்துறை. அவரது மனைவியும் நடிகையுமான காவ்யா மாதவனும் கைதி செய்யப்படலாம் என்று போது அவா் தலைமறைவானாா். இந்நிலையில் இந்த வழக்கில் பிரபல சினிமா பாடகி ரிமி டாமியின் பெயரும் சோ்க்கப்பட்டுள்ளதாம். மலையாளத்தில் தொகுப்பாளினியாகவும், மலையாள படத்தில் பாடலைகளையும் பாடியுள்ளாா்ி. அதோடு தீலிப்புடன் இரண்டு படங்களில் நடித்துள்ளாா்.

பாடகி ரிமி இதுகுறித்து ஆவேசமடைந்த அவா், நடிகா் தீலிப்புக்கும் எனக்கும் எந்த விதமான தொழில் தொடா்போ, பண மாற்றமோ கிடையாது. வெளிநாடுகளில் பாடல் புரோகிராமிற்கு அடிக்கடி செல்லுவேன். இந்த சம்பவம் கேள்விப்ட்டதும் முதலில் அவருக்கு ஆறுதல் கூறினேன். இது தொடா்பாக காவல் துறை விசாாிக்க தான் செய்தாா்கள், ஆனா தேவையில்லாமல் இதில் என்னை சம்பந்தம் படுத்தி விட்டாா்கள் என்றாா்.