சூப்பர் சிங்கரில் சமீபத்தில் வெற்றி பெற்றவர் செந்தில்கணேஷ் இவரும் இவரது மனைவி ராஜலட்சுமியும் இணைந்தே பல பாடல்கள் பாடினர்.

கிராமிய பாடல்களை மிக வித்தியாசமான முறையில் பாடிய செந்தில்கணேசுக்கு அதிர்ஷ்ட காற்று அடித்து கொண்டிருக்கும் ஆடிமாத காற்றை போல அள்ளி தெளிக்கிறது. ஏற்கனவே வின்னராகி ரஹ்மான் இசையில் பாட இருக்கும் செந்தில் கணேசுக்கு இசையமைப்பாளர் இமானும் தற்போது வாய்ப்பளித்துள்ளார் .

சிவகார்த்திகேயன் நடிக்கும் தனது சீமராஜா படத்தில் ஒரு பாடல் பாட வாய்ப்பளித்துள்ளார் இமான் இதை தனது டுவிட்டர் பக்கத்தில் டுவிட்டியுள்ளார் இமான்