கடந்த நில நாட்களாக, பாடகி சுசித்ரா டிவிட்டரில் பதிவு செய்து வரும் தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் மிகுந்த பரபரப்பையும், பலத்த சர்ச்சையையும் ஏற்படுத்தி வருகிறது. அட்ஜஸ்மெண்ட என்ற பெயரில் நடிகை, நடிகர்கள் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் என பாடகி சுசித்ராவின் டுவிட்டர் பக்கத்தில் சமீபத்தில் வெளியான படங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு சுசித்ராவின் டிவிட்டர் பக்கத்தில் நடிகர் தனுஷ், திரிஷா, விஜய் தொலைக்காட்சு புகர் டிடி, ஹன்சிகா, இசையமைப்பாளர் அனிருத், ஆண்டிரியா ஆகியோர் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியானது. இது சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதன்பின், நடித்த நடிகை சஞ்சிதா ஷெட்டி, நண்பன் படத்தில் நடித்த அனாயா போன்றோரின் அரை நிர்வாணப் புகைப்படங்கள் மற்றும் வீடியோ வெளியிடப்பட்டிருந்தது. இதைக் கண்ட பலர் அதிர்ச்சியடைந்தனர். அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை என சஞ்சிதா ஷெட்டி கூறியுள்ளார்.
இந்நிலையில், விரைவில் தனுஷ் மற்றும் அமலாபால் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியிடப்படும்.மேலும், இன்னும் பல நடிகைகளின் லீலைகளை வெளிப்படுத்துவேன் என அந்த டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், தனது டிவிட்டர் கணக்கை யாரோ ஹேக் செய்து, இது போன்ற படங்களை பதிவிட்டு வருகிறார்கள்.அதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன் என சுசித்ரா கூறியுள்ளார்.