ரேடியோ தொகுப்பாளினி மற்றும் பின்னணிப் பாடகியான சுசித்ரா சமீப காலமாக சர்ச்சையான பதிவுகளை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்தி வருகிறார்.

சமீபத்தில், ஒரு விளையாட்டின் போது, நடிகர் தனுஷின் டீம் தன்னை தாக்கியதாகவும், அதனால் தனது கையில் காயம் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்து, அதன் புகைப்படத்தையும் ட்விட்டரில் வெளியிட்டார். அதன்பின், தனுஷ் தாக்கவில்லை, அவரின் டீம் தன்னை தாக்கியது என்றார். இந்நிலையில் தற்போது சின்னத்திரை டிடி, தனுஷ், ஹன்சிகா, அனிருத், ஆண்ட்ரியா ஆகியோரின் நெருக்கமான புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அட்ஜஸ்மெண்ட என்ற பெயரில் நடிகை, நடிகர்கள் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்ட்டிருப்பதாக குறிப்பிட்டிருக்கும் அவர், பொறுத்திருங்கள் நண்பர்களே.. இன்னும் நிறைய வரும்.. அதிர்ச்சியடைய காத்திருங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.


ஒரு புகைப்படத்தில் தனுஷுடன் நடிகை திரிஷாவும், ஹன்சிகாவுடன் ஒரு ஆண் நண்பரும், விஜய் டீவி புகழ் டிடி(திவ்யதர்ஷினி) ஒரு ஆணுடனும், இசையமைப்பாளர் அனிருத், பாடகியும், நடிகையுமான ஆண்ட்ரியாவும் ஆகியோர் நெருக்கமாக இருக்கும் சில புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார்.

இந்த விவகாரம் தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.