தர்மபுரியை சேர்ந்தவர் பாடகர் சுந்தரய்யர். கடந்த 2017ம் ஆண்டில் ஜோக்கர் படத்துக்காக பாடல் பாடி அதற்காக தேசிய விருது பெற்றவர் இவர். தொடர்ந்து அறம் படத்திலும் இவர் பாடியுள்ளார்.

இந்த படங்கள் தவிர்த்து இவருக்கு சினிமா வாய்ப்பு வராததால் சோகத்தில் உள்ளார். தமிழனாக பிறந்தது தவறா என்ற ரீதியில் ஒரு பதிவையும் வெளியிட்டு உள்ளார்.

தொடர்ந்து வாய்ப்புகள் வராததால் மிகவும் வறுமையில் உள்ளோம் குழந்தைகளின் கல்வியும் பாதிப்படைந்துள்ளதாக கூறியுள்ள இவருக்கு நண்பர் ஒருவர் 1000 ரூபாய் அனுப்பி உள்ளதாக கூறியுள்ளார்.

சென்னை சென்று ஆர்கெஸ்ட்ரா ப்ரோக்ராம்களில் பங்கேற்கலாம் என்று இருப்பதாக தெரிவித்துள்ளார்.