அஜித்துக்காக சிறுத்தை சிவா எழுதிய பாடல் இதுதான்

சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்துள்ள ‘விவேகம்’ படத்தின் இசையமைப்பாளர் அனிருத் கிட்டத்தட்ட இந்த படத்தின் அனைத்து பாடல்களின் ஒலிப்பதிவு பணியை முடித்துவிட்டார். மொத்தம் நான்கு பாடல்களும் ஒரு தீம் மியூசிக்கும் இடம்பெற்றுள்ள நிலையில் இந்த படத்தின் ஒரே ஒரு சிங்கிள் பாடல் வரும் திங்கள் அன்று வெளியாக உள்ளது.

‘தல..விடுதல..என்று தொடங்கும் இந்த பாடலை இயக்குனர் சிறுத்தை சிவா எழுதியுள்ளார். ஆலுமா டோலுமா ஸ்டைலில் உருவாகியுள்ள இந்த படம் அஜித் ரசிகர்களை பெரிதும் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ‘விவேகம்’ படத்தின் டீசர் பணி கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாகவும் இம்மாத இறுதியில் இந்த படத்தின் டீசர் வெளியாகும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.