தமிழ் படத்தின் இரண்டாம் பாகம் – விரைவில்!

12:53 மணி

சமீபத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் விக்ரம் வேதா படத்தைத் தயாரித்த Y-Not Studios சஷிகாந்த்தின் தயாரிப்பில் தமிழ் படம் இரண்டாம் பாகம் விரைவில் வெளிவர உள்ளது.

தமிழ் படம் 2010 ஆண்டில் தயாநிதி அழகிரியின் “கிளவுட் நைன் மூவீஸ்” நிறுவனம் மூலம் தயாரித்து, சிவா மற்றும் திசா பாண்டே நடிப்பில் வெளியானது. பிரபல தமிழ் படங்களின் காட்சிகளை நகைச்சுவை பாணியில் வழங்கிய இப்படம் மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றிப்படமாகியது.


இதனைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் வெகுவாக எதிர்ப்பார்க்கப்பட்டது. இந்த எதிர்ப்பார்ப்பிற்கு முற்றுபுள்ளி வைக்கும் விதமாக 6 ஆண்டுகளுக்குப் பிறகு இதன் இரண்டாம் பாகம் சஷிகாந்தின் தயாரிப்பில் விரைவில் படப்பிடிப்பு நடக்கும் என்று  சமீபத்தில் பிரபல நாளிதழில் அளித்த பேட்டியில் சி. எஸ். அமுதன்  தெரிவித்துள்ளார்.

தமிழ் படம் இரண்டாம் பாகத்திலும் சிவா கதாநாயகனாக நடிப்பது குறிப்பிடத்தக்கது. இதே கூட்டணியில் வெளிவந்த தமிழ் படம் ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது போன்று இப்படமும் வெற்று பெற்று ரசிகர்களை மீண்டும் ஒரு நகைச்சுவை மழையில் நனைய வைக்கும் என்று நம்பலாம்.

(Visited 8 times, 1 visits today)
The following two tabs change content below.
s அமுதா

s அமுதா

இவர் செய்திகள் பிரிவிற்கு ஒரு வருடகால அனுபவம் வாய்ந்தவர்.மருத்துவம் மற்றும் மகளிருக்கான கட்டுரைகள் எழுதுவதில் அனுபவம் வாய்ந்தவர். ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிப்பெயர்ப்பு செய்வதில் நல்ல புலமை உள்ளவர். இந்த வலைதளத்தில் இவர் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் சின்னத்திரை தொடர்பான செய்திகளில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்புகொள்ள- amukrishnan.b@gmail.com